கனிந்திடும் உன்நெஞ்சினில் கதிர்காமம்
நீறு தரித்த நிலவூ முகம்
சேறு அழுக்கு இல்லா அன்பு அகம்
வீறு கொண்டு உழைத்த கரம்
ஊறு துளியூம் நினையா மனம்
கூறும் மொழி குழந்தை மொழி
ஏறு நடையழகன் எழில் நாமம்
பேறு பெற்ற பெருநாமம் நாராயணப்பிள்ளை
களுவாஞ்சி நன் நகரில் நீ
விருதாகி விருட்சமாய் எமக்கு
நிழல் கொடுத்த ஆலமரம்
எழுவானுக்கு நீ இதயம்
எழுந்து வருவாயே இங்கு உதயம்
வழுதியாய் புழுதியில் புலர்ந்தவனே
விழுந்து நீ விரைந்து விண்ணுலகம்
எழுந்து நீ போனாலும்
வீழாது உனது அன்னதானம்
உதிர்த்துவாய் நீ உன்மகளை
உகந்த மலையான் வாசலிலே
அகந்தையின்றி அடியாகும் அங்கு
ஆறுமுகனுக்கு பொங்கல் செய்வார்
கதிரமலை கண்ட இடம் வந்தவூடன் - உன்
உதிரமொடு உடலும் உருகுமையா
அதிரவே அரோகரா என்ற கோ~ம்
அழகனுக்கு அவல் படைத்து அகம் மகிழ்வாய்
கந்தன் வலம் வருகையிலே
உந்தன் உளம் உவகை கொள்ளும்
செந்தாமரை மலர் எடுத்து நீ
சிந்தாமல் தூவி நிற்ப்பாய்
செந்தூரன் சிந்தை குளிர நீயூம்
விந்தை செய்து வேலனை வணங்கிடுவாய்
முந்தை வினையவே முருகவேளை - நீ
பசியென்று வருவோற்கு வள்ளலாகும்
படைத்திடுவார் பரிவாகச் சோறுகறி
பசிப்போரின் உளம் குளிர கோமானும்
புகட்டிடுவார் புனிதமாய் பொன்மொழிகள்
விசித்திரமாய் வியாழையில் வேலனுக்கு - நீ
வேல் நாட்டி பூசை செய்து புகழுறுவாய்
கசிந்திடும் கந்தனின் கருணையிலே
கனிந்திடும் உன் நெஞ்சினில் கதிர்காமம்
களுவாஞ்சியூர் சுந்தர்