குருதி வகை






இரத்தத்தில் கலந்திருக்கும் சிகப்பு இரத்த அணுக்களின்(RBCs) மேற்பரப்பில் இருக்கும் அல்லது இல்லாதிருக்கும் மரபு உடற் காப்பு ஊக்கிகளை வைத்துக் குருதி வகைப்படுத்தப்படுகிறது.(இதனை, இரத்த பிரிவு என்றும் அழைக்கலாம்) இந்த உடற்காப்பு ஊக்கிகள் புரதமாக, மாவு சத்தாக, இரத்த சர்க்கரை புரதமாக, அல்லது க்ளைகோ லிபிடாக இருக்கலாம். இது ரத்த பிரிவின் அடிப்படையில் ஏற்படக்கூடியது. பல்வேறு திசுக்களில் இருக்கும் வேறு வகையான உயிரணுக்களின் மேற்பரப்பிலும் சில உடற்காப்பு ஊக்கிகள் காணப்படுகின்றன. இரத்த செல்களின் மேற்பரப்பில் காணப்படும் உடற்காப்பு ஊக்கிகளில் பெரும்பாலனவை இரட்டை மரபணுவிலிருந்து (அல்லது நெருக்கமான தொடர்புடைய மரபணுவில் இருந்து)உற்பத்தி ஆகின்றன. இவைகள் அனைத்தும் சேர்ந்து ரத்த பிரிவு அமைப்பை உருவாக்குகின்றன.

இரத்த வகை மரபு வழியாக பெறப்பட்டதாகும்.இது பெற்றோர் இருவரிடமிருந்தும் பெறப்படுகிறது. இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்ப்யூஷன் (ISBT) மொத்தம் 30 மனித இரத்த பிரிவு அமைப்புகளை அங்கீகரித்து உள்ளது                                   

பல கர்ப்பிணிப் பெண்கள் வேறுவகையான(தன்வகை இரத்தமல்லாத) இரத்த வகையைக் கொண்ட கருவை சுமக்கிறார்கள். இதனால் தாய்மார்களுக்குள் கருவின் RBC க்களை எதிர்த்து போராடக்கூடிய உடற்காப்பு மூலங்கள் உருவாகின்றன. சில சமயங்களில் இந்த தாய்மார்களிடத்தில் உருவாகும் ஒரு சிறிய தடுப்பாற்றல் புரதமானIgG,கருக்கொடிக்கு சென்று கரு RBCக்களை அழித்து இரத்தச் சிகப்பணு சிதைவை உண்டாக்குகின்றது. இதனால்இரத்தச் சிகப்பணு சிதைவு நோய் பிறந்த குழந்தைக்கும் ஏற்பட நேரிடுகின்றது. இந்த நோய் கருவில் இரத்த அணு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் ஏற்படுகிறது, இது லேசான வீதத்தில் இருந்து மிக கடுமையான வீதம் வரை வேறுபட்டு இருக்கக்கூடுகிறது

இரத்த பொருட்கள்

ஒவ்வொரு இரத்ததானத்தில் இருந்தும் அதிகமான பலன்களை பெறவும் அதன் வாழ்நாளை நீடிக்கவும், இரத்த வங்கிகள் முழுமையாக இருக்கும் இரத்தத்தை சிறு சிறு பகுதிப்பொருட்களாகப் பிரிக்கின்றன . இவற்றில் மிகவும் பொதுவாக கிடைக்க கூடிய பொருட்கள்- RBCக்கள், பிளாஸ்மா, இரத்த வட்டுகள், உறைந்த பிளாஸ்மா, புத்துணர்வுடன் இருக்கும் உறைந்த பிளாஸ்மா (FFP)ஆகியவை பொட்டலமாக
கிடைக்கின்றன. V மற்றும் VIIIஇல் இருக்கும் உறையும் தன்மையை நீட்டித்து வைப்பதற்கு FFP உடனடி-குளிர்பதனம் செய்யப்படுகிறது. இவை இரத்தம் உறைவதில் பிரச்சனை இருக்கும் நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகின்றன. இந்த பிரச்சனைகள், கல்லீரல் நோய், இரத்தம் உறையாமல் இருக்க கொடுக்கும் மருந்தை அதிக அளவில் கொடுத்தல், அல்லது இரத்தகுழாய்களுக்குள் பரவலான உறைதல்(DIC) ஆகியவற்றால் நிகழ்கின்றன.
முழுமையாக இருக்கும் இரத்த யூனிட்களில் இருந்து எந்த எவ்வளவு அளவு நீக்க முடியுமா, அவ்வளவு அளவு பிளாஸ்மாவை நீக்கி, சிகப்பு அணுக்கள் எடுக்கப்பட்டு பொட்டலமாக கட்டப்படுகின்றன.
நவீன மீண்டினைப்பு முறைகளை கொண்டு, உறையும் உறையவைக்கும் பொருட்கள் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டு ஹீமொபீளியாவை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சேகரிக்கப்பட்ட இரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் பழுதடைவதனால் ஏற்படும் அபாயங்களை குறைக்க முடிகிறது.

சிகப்பு இரத்த அணு பொருத்தம் 

RBC-க்களின் மேற்பரப்பில் AB இரத்த பிரிவினருக்கு A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகள் இருக்கின்றன. இந்த A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக அவர்களது இரத்த ஊநீர் எதுவும் புரிவதில்லை. இதன் விளைவாக, AB இரத்த பிரிவை கொண்ட ஒருவர் அதே இரத்த பிரிவினரிடம் இருந்தும் இரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம்.(AB க்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு). ஆனால் இந்த பிரிவினரால் கொடுக்கப்பட்ட இரத்தம் இதே பிரிவு, அதாவது AB இரத்த பிரிவு கொண்ட ஒருவருக்கு தான் செலுத்த பட வேண்டும்.

  • A இரத்த பிரிவு கொண்ட மனிதர்களின் RBC மேற்பரப்பில் A உடற்காப்பு ஊக்கி இருக்கிறது. இந்த பிரிவின் இரத்த ஊநீர் IgM உடற்காப்பு மூலங்களை B உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக கொண்டுள்ளது. இதனால் A இரத்த பிரிவை கொண்டுள்ள ஒரு நபர் A அல்லது O பிரிவினரிடம் இருந்து தான் இரத்தம் பெற முடியும்.( A வகைக்கு முக்கியத்துவம் தரவேண்டும்). இவர்களால் A மற்றும் AB பிரிவினருக்கு இரத்தம் தானம் செய்ய முடியும்.
  • B இரத்த பிரிவு கொண்டிருக்கும் நபர்களின் RBC மேற்பரப்பில் B உடற்காப்பு ஊக்கிகள் இருக்கின்றன. இவர்களில் ஊநீர், A உடற்காப்பு ஊக்கிக்கு எதிரான IgM உடற்காப்பு மூலங்களை கொண்டுள்ளது. இதனால், B பிரிவு இரத்தத்தை கொண்டுள்ள ஒருவர் B அல்லது O பிரிவினரிடம் இருந்து இரத்தம் பெற்றுக்கொள்ளலாம்.(B வகைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்). அதே சமயத்தில் இவர்களால் B மற்றும் AB பிரிவனருக்கு இரத்தம் கொடுக்க முடிகிறது.
  • O இரத்த பிரிவு (அல்லது சில நாடுகளில் அழைக்கும் படி இரத்த பிரிவு பூஜ்ஜியம்) கொண்டிருக்கும் நபர்கள் தங்களது RBC மேற்பரப்பில் A மற்றும் B உடற்காப்பு ஊக்கிகளை கொண்டிருப்பதில்லை. ஆனால் இவர்களின் இரத்த ஊநீர் A மற்றும் B இரத்த பிரிவு உடற்காப்பு ஊக்கிகளுக்கு எதிராக IgM ஆண்டி-A மற்றும் ஆண்டி-B உடற்காப்பு மூலங்களை கொண்டு உள்ளது. இதன் காரணத்தால் ஒரு O பிரிவு இரத்தத்தை கொண்டுள்ள ஒருவர், மற்றொரு O பிற ஈனரிடம் இருந்துதான் இரத்தத்தை தானமாக பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இவர்களால் எல்லா வகை இரத்த பிரிவினருக்கும் தங்களது இரத்தத்தை தானமாக கொடுக்க முடியும்.(அதாவது A, B, O or AB). மிக அத்தியாவசியமான காலக்கட்டங்களில் எவருக்காவது இரத்தம் தேவைப்படுமானால், அந்த சமயங்களில் இரத்தம் பெற்றுக்கொள்பவரின் பிரிவு என்னவென்று கண்டு பிடிக்க நேரம் அதிகம் ஆகும் பொது, அப்பொழுது O நெகடிவ் பிரிவை நாம் பயன் படுத்திக்கொள்ளலாம்..


சிகப்பு இரத்த அணு பொருத்தத்தின் வாய்ப்பாடு

பெற்றுக்கொள்பவர்[1]தானம் கொடுப்பவர்[1]
O-O+A−A+B−B+AB−AB+
O−Green tickstyle="width:3em"
O+Green tickGreen tick
A-Green tickGreen tick
A+Green tickGreen tickGreen tickGreen tick
B-Green tickGreen tick
B+Green tickGreen tickGreen tickGreen tick
AB−Green tickGreen tickGreen tickGreen tick
AB+Green tickGreen tickGreen tickGreen tickGreen tickGreen tickGreen tickGreen tick
வாய்ப்பாடு குறிப்பு
1. குருக்கினை முறை படி தேர்ந்தெடுக்கும் இரத்தத்தில், சில வித்தியாசமான உடற்காப்பு மூலங்கள் இல்லாததால் அந்த இரத்தம் தானம் கொடுப்பவருக்கும் அதனை பெற்றுக்கொள்பவரின் இரத்தத்திற்கும் பொருத்தம் இல்லாமல் போகச் செய்கிறது.
RhD-நெகடிவ் பிரிவு இரத்தத்தை கொண்டு இருக்கும் ஒரு நோயாளியிடம் ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் இருப்பதில்லை.(இதற்குமுன்னால் RhD-பாசிடிவ் RBC-க்களுக்கு வெளிபடுத்தபடுவதில்லை) இவர்களால் RhD-பாசிடிவ் இரத்தத்தை ஒரே ஒரு மோரி பெற்றுக்கொள்ள முடியும், ஆனால் RhD உடற்காப்பு மூலங்களுக்கு வெளிப்படுத்தப்படும் ஒரு பெண் நோயாளிக்கு இதனால் ஆபாயங்கள் உண்டாகலாம். அவர் கருத்தரிக்கும் போது அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு ஹெமாளிடிக் நோய் ஏற்படுகிறது. RhD-நெகடிவ் நோயாளியின் உடலில் ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் உறபத்தியானால், அதன் பிறகு RhD-பாசிடிவ் இரத்தத்திற்கு வெளிப்பட்டு இருக்கும் பொழுது இரத்தம் ஏற்றுவதினால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தானவையாக இருக்கும். கருத்தரிக்கும் வயதில் இருக்கும் RhD-நெகடிவ் இரத்தத்தை கொண்டுள்ள பெண்களுக்கு கண்டிப்பாக RhD-பாசிடிவ் இரத்தத்தை தரக்கூடாது. அதே போல் RhD உடற்காப்பு மூலங்களை கொண்டுள்ள நோயாளிகளுக்கும் இந்த இரத்தத்தை ஏற்றக்கூடாது. இந்த ஒரு காரணத்திற்காக இரத்த வங்கிகள் பிரத்தியேகமாக ரீசஸ்-நெகடிவ் வகை இரத்தத்தை சேர்த்து பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும். அத்தியாவசியமான நேரங்களில், இரத்த வங்கிகளில் RhD-நெகடிவ் வகை இரத்தம் மிகவும் குறைந்து இருக்கும் சமயங்களில் குழந்தை பிறக்கும் காலக்கட்டத்தை தாண்டிய RhD-நெகடிவ் இரத்த பிரிவை கொண்டுள்ள பெண்களுக்கும் Rh-நெகடிவ் இரத்த பிரிவை கொண்டுள்ள ஆண்களுக்கும் RhD பாசிடிவ் இரத்தம் ஏற்றப்படலாம். ஆனால் இந்த ஆண்களுக்கு ஆண்டி-RhD உடற்காப்பு மூலங்கள் இருக்ககூட்டாது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த வங்கிகளில் குறைவாக இருக்கும் RhD-நெகடிவ் வகை இரத்தத்தை சேமித்துகொள்ளலாம். இதன் மருதலைக்கு இது பொருந்தாது; RhD-நெகடிவ் இரத்தத்திற்கு RhD பாசிடிவ் நோயாளிகள் எந்த வித எதிர்விளைவுகளையும் காட்டுவதில்லை

வரலாறு

இரத்த ஏற்றம் தொடர்பாக கார்ல் லாண்ட்ஸ்டேய்னர் என்பவர் மேற்கொண்ட ஆரம்ப கால பரிசோதனைகளின் மூலம் மிக முக்கியமான இரு இரத்த பிரிவு அமைப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. 1901 இல் ABO பிரிவும் அலெக்சாண்டர் S. வெய்னருடன் கூட்டு சேர்ந்து 1937 ஆம் ஆண்டில் ரீசஸ் பிரிவும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டன.1945 இல் கண்டுபிடிக்கப்பட்ட கூம்ப்ஸ் சோதனை,  இரத்த பரிமாற்றம் கண்டறியப்பட்டது, மற்றும் பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் பற்றி அறிந்து கொண்டது ஆகிய யாவும் புதிய புதிய இரத்த வகைகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்தன. தற்போது 30 மனித இரத்த பிரிவு அமைப்புகள், இன்டர்நேஷனல் சொசைடி ஆப் ப்ளட் ட்ரான்ஸ்ப்யூஷனால் (ISBT) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 30 பிரிவு இரத்த பிரிவுகளுடன்ஏறத்தாழ 600 வித்தியாசமான உடற்காப்பு ஊக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவற்றில் பல மிக அரிதானவை. இவைகள் ஒரு சில இனக்குழுக்களில். தடய அறிவியல் மற்றும் பெற்றோர் கண்டறியும் சோதனைகளிலும் இரத்த வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பயன்படுத்தப்படும் இடங்களில் இப்போது முடிவுகளை இன்னும் தெளிவாக தரும் மரபு வழி கைரேகை பதிவு பயன்படுத்தப்படுகின்றது.
New Olympic Sports Club Kaluwanchikudy Web Developer

Morbi aliquam fringilla nisl. Pellentesque eleifend condimentum tellus, vel vulputate tortor malesuada sit amet. Aliquam vel vestibulum metus. Aenean ut mi aucto.